பொலிஸாா் துப்பாக்கிச் சூடு

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Spread the love

பொலிஸாா் துப்பாக்கிச் சூடு

ஊரகஸ்மங்ஹந்தி பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் ஒருவா் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மற்றுமொருவரை தாக்கிய சம்பவம் தொடா்பில் சந்தேக நபரை கைது செய்ய சென்ற போது, ​​அவர் கூரிய ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரிகளை தாக்கியுள்ளார்.

அதனைத் தடுக்கும் நோக்கில் பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரின் காலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளாா்.

சந்தேக நபர் 26 வயதுடையவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No posts found.