பொலிஸார் தவறு செய்தால்

வீடு புகுந்து யுவதியை தாக்கி காயப்படுத்திய பொலிஸ் அதிகாரி
Spread the love

பொலிஸார் தவறு செய்தால்

வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் C.P விக்கிரமசிங்கே அவர்கட்கும் ஊடகவியலாளர்களுக்குமான விசேட கலந்துரையாடல் ஒன்று அத்தியட்சகரின் காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது

இதன்போது கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட சிரேஷ்ட போலிஸ் அத்தியட்கர் வவுனியா மாவட்டத்தில் பல பொலிஸ் நிலையங்களில் பொதுமக்களின் பல முறைப்பாடுகளை ஏற்க பொலிஸார் மறுக்கின்றனர்

எனவும் அதேவேளை திருட்டு சம்பவங்கள் பற்றி பொதுமக்கள் பொலிஸாரிடம் முறையிடும்போதும் ஒரு சில பொலிஸார் அதன் உண்மையான பெறுமதிகளை மறைத்து தவறான பெறுமதிகளை முறைப்பாட்டில்

பொலிஸார் தவறு செய்தால்

பதிவதாகவும் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன இவ்வாறு செயல்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாம் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் இது போன்ற சம்பவங்கள் வவுனியாவில் இடம்பெற்றால்

பொதுமக்கள் உடனடியாக தமக்கு அறியப்படுத்துமாறும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்கர் தெரிவித்துள்ளார்

பொதுமக்கள் தன்னை எந்த நேரத்திலும் அழைக்க முடியும் என்றும் 071-8591340 குறித்த தொலைபேசி ஊடாக தகவல்களை நேரடியாக தமக்கு அறிவிக்க முடியும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்