பொதுமன்னிப்பு குறித்து மைத்திரி விளக்கம்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன
Spread the love

பொதுமன்னிப்பு குறித்து மைத்திரி விளக்கம்

ரோயல்பார்க் கொலையாளி ஜூட் ஜயமஹவிற்கு பொதுமன்னிப்பை வழங்கியதன் மூலம் தான் அரசியல் அமைப்பை மீறி செயற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

குறித்த நபரின் பொதுமன்னிப்பானது சகல நடைமுறைகளுக்கும் உட்பட்ட அரசியலமைப்பின் விதிகளுக்கு அமைவானது என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பொதுமன்னிப்பு குறித்து மைத்திரி விளக்கம்

2005 இல் அத்துருகிரிய பிரதேசத்திலுள்ள ரோயல்பார்க் தொடர்மாடியில் பெண்ணொருவரை கொலை செய்தமைக்காக கொழும்பை சேர்ந்த செல்வந்தரின் மகனிற்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது.

2019 நவம்பர் 9 ம் திகதி ஜூட்ஜெயமகவிற்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பொதுமன்னிப்பை வழங்கினார்.தனது பதவிக்காலத்தின் இறுதியில் சிறிசேன பொதுமன்னிப்பை வழங்கியிருந்தார்.

அதன் பின்னர்ஜெயமஹ நாட்டிலிருந்து வெளியேறினார் அவர் தற்போது எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை.

இந்நிலையிலேயே தான் பொதுமன்னிப்பை வழங்கியதன் மூலம் அரசியலமைப்பைமீறவில்லை என சிறிசேன நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.