பேரூந்து விபத்து ஒருவர் மரணம் 48 ஈரானியர் காயம்
ஈராக்கில் பேருந்து விபத்தில் ஈரானிய யாத்ரீகர் ஒருவர் பலியாகியும் ,
மேலும் 48 பேர் காயமடைந்துள்ளதாக ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம்
தெரிவித்துள்ளது .
காதிமெய்ன்-சமரா சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .
ஈரானிய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில்,
டிரக் ஒன்று மோதியதால் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த சாலை விபத்தில் சிக்கி ஈரானிய பெண் ஒருவர் உயிரிழந்தார்,
மேலும் 48 ஈரானியர்களும் காயமடைந்துள்ளனர் .
விபத்து தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .
காயமடைந்தவர்கள்அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .