பேருந்துக்கு அடியில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்பு| இலங்கை செய்திகள்

பேருந்துக்கு அடியில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்பு| இலங்கை செய்திகள்
இதனை SHARE பண்ணுங்க

பேருந்துக்கு அடியில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்பு| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |நோர்டன்பிரிட்ஜ் தியகல வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தின் பின்னர் பஸ்ஸுக்கு அடியில் புதையுண்டிருந்த இளைஞனின் சடலம் லக்ஷபான இராணுவ முகாம் படையினர் மற்றும் நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரிகளால் இன்று (20) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஹிக்கடுவ களுபே பகுதியைச் சேர்ந்த டிலான் கௌசல்யா என்ற 33 வயதுடைய நபரின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (19) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில், 26 பேர் காயமடைந்து , இரண்டு யுவதிகள் உயிரிழந்திருந்த நிலையில், பேருந்தில் வந்த ஒருவர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து
பேருந்தை சோதனையிட்ட போது காணாமல் போன இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனை SHARE பண்ணுங்க