பெண் தன்னுயிரை மாய்த்தார்
மஸ்கெலிய பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை பெரிய சோளங்கந்த தோட்டத்தில் பெண் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
மஸ்கெலிய காவல்துறைக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவத்தை பார்வையிட்ட பிறகு ஹட்டன் மாவட்ட நீதவானுக்கு தகவல் வழங்கியுள்ளனார்.
சம்பவ இடத்திற்கு சனிக்கிழமை (29) வருகைதந்த ஹட்டன் மாவட்ட பதில் நீதவான், சடலத்தை பார்வையிட்ட பிறகு, பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.
பெண் தன்னுயிரை மாய்த்தார்
பெரிய சோளங்கந்த தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 49 வயதுடைய தனலெட்சுமி என்ற பெண்ணின் சடலமாக இவ்வாறு மீட்கப்பட்டது.
சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.