பெண் கான்ஸ்டபிளை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது|இலங்கை செய்திகள்

சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
இதனை SHARE பண்ணுங்க

பெண் கான்ஸ்டபிளை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது|இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் களனி பொலிஸ் அலுவலகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற இசைக் கச்சேரி ஒன்றின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பெண் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கப்பட்டதாகவும், தாக்குதலை மேற்கொண்ட கான்ஸ்டபிள் அவரின் கைத்தொலைபேசியையும் திருடிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னர் சந்தேகத்திற்குரிய கான்ஸ்டபிளும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண் கான்ஸ்டபிளை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது|இலங்கை செய்திகள்

இந்த கான்ஸ்டபிள் கடந்த 25 ஆம் திகதி இரவு கடமைக்கு வருகை தந்ததுடன், கடவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற இசைக் கச்சேரியை காண சாதாரண உடையில் யாரிடமும் கூறாமல் சென்றுள்ளார்.

அங்கு இசை நிகழ்ச்சியின் பாதுகாப்புக்காக சீருடையில் இருந்த பியகம பொலிஸ் பயிலுனர் கான்ஸ்டபிளிடம் வாக்குவாதம் செய்து அவரை தாக்கி காயப்படுத்திவிட்டு கைத்தொலைபேசியை திருடிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பெண் கான்ஸ்டபிள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் களனி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த கான்ஸ்டபிள் நேற்று (27) கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


இதனை SHARE பண்ணுங்க