பெண் ஒருவர் படுகொலை

மனைவியை ஐந்து துண்டாக வெட்டி எறிந்த கணவன் | உலக செய்திகள்

பெண் ஒருவர் படுகொலை

மிஹிந்தலை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கொலையாளி பெண்ணை வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொரமடலாவ பகுதியில் நேற்று (29) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் தனது தாயாருடன் வீட்டில் தங்கியிருந்ததாகவும், தாய் அருகில் உள்ள வீட்டிற்கு வேலைக்கு சென்றிருந்த நிலையில், அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டிற்கு வந்து, குறித்த பெண்ணை வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

51 வயதான தொரமடலாவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலையை செய்த 47 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.