புத்தர் சிலைகளுடன் வந்த பிக்கு கைது

புத்தர் சிலைகளுடன் வந்த பிக்கு கைது

புத்தர் சிலைகளுடன் வந்த பிக்கு கைது

புத்தர் சிலைகளுடன் வருகைதந்திருந்த பிக்கு உள்ளிட்ட ஏழுவர் கைது செய்யப்பட்டனர். அவர்களை அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ​பொலிஸார் தெரிவித்தனர்.

வலப்பனை, கீர்த்திபண்டாரபுர பொலிஸ் பிரதேசத்தில் புதையல் தோண்ட வருகை தந்திருந்த பௌத்த பிக்கு ஒருவர் உள்ளிட்ட ஏழு பேரை கீர்த்திபண்டாரபுர பொலிஸார் சனிக்கிழமை (25) மாலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிக்கு கேகாலையைச் சேர்ந்தவர், காலியைச் சேர்ந்த பெண், மீரிகமயைச் சேர்ந்த ஆண்ணொருவர் அடங்குகின்றனர். ஏனைய நால்வரில் ஒருவர் வலப்பனை கீர்த்திபண்டாரபுர பகுதியைச் சேர்ந்தவர் மற்றைய மூவரும் தம்புள்ளை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

புத்தர் சிலைகளுடன் வந்த பிக்கு கைது

அதேநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் வசமிருந்து மூன்று புத்தர் சிலைகள்,புதையல் தோண்டுவதாக பயன்படுத்த கொண்டுவந்த ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக விசாரணைகளை மேற்கொள்ளும் கீர்த்திபண்டாரபுர பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சந்தேக நபர்களை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது இப்பிரதேசத்தில் புதையல் தோண்ட வருகை தந்த விடயம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை, கைப்பற்றிய பொருட்களுடன் வலப்பனை நீதிமன்ற நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.