புதின் சீனா பாதுகாப்பு அமைச்சர் திடீர் சந்திப்பு

புதின் சீனா பாதுகாப்பு அமைச்சர் திடீர் சந்திப்பு

புதின் சீனா பாதுகாப்பு அமைச்சர் திடீர் சந்திப்பு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பாதுகாப்பு அமைச்சரும்
சீன மக்கள் குடியரசின் மாநில கவுன்சில் உறுப்பினருமான
லி ஷங்ஃபுவுடன் திடீர் சந்திப்பை மேற்கொண்டார்

இந்த சந்திப்பின் போது, ​​சீனத் தலைவர் ஜி ஜின்பிங்கின் சமீபத்திய ரஷ்ய பயணம் ,மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும், ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான,உறவுகள் இராணுவம் உட்பட அனைத்து துறைகளிலும் சிறப்பாக வளர்ந்துவருவதாகவும் புடின் கூறினார்.

சீன ரஷ்ய நாடுகளுக்கிடையேயான உறவுகள் பொருளாதாரம்,
சமூகம், கலாச்சாரம் மற்றும் கல்விப் பகுதிகள் மற்றும் இராணுவத் துறைகளுக்கு இடையே அனைத்து பகுதிகளிலும் நன்றாக வளர்ந்து வருகின்றன.

ரஷ்யாவும் சீனாவும் தங்கள் இராணுவத் துறைகள் மூலம் பயனுள்ள தகவல்களைத் தொடர்ந்து பரிமாறிக் கொள்வதாகவும் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதாகவும் புடின் குறிப்பிட்டார்.

ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு
இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும்
என விளாதிமீர் புதின் தெரிவித்துளளார் .

இவர்கள் சந்திப்பு அமெரிக்கா ஏமாற்றும் மேற்குலக
நாடுகளை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

அமெரிக்கா இரகசிய ஆவணம் கசிந்த பின்னர்
இடம்பெற்ற இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம்
வாய்ந்த ஒன்றாக பார்க்க படுகிறது .