பிரிட்டனில் வெடிகுண்டு பொதி சுற்றிவளைத்த இராணுவம்

பிரிட்டனில் வெடிகுண்டு பொதி சுற்றிவளைத்த இராணுவம்
Spread the love

பிரிட்டனில் வெடிகுண்டு பொதி சுற்றிவளைத்த இராணுவம்

பிரிட்டனில் பிட்சா ஹட்டில் சந்தேகத்திற்குரிய பொட்டலம் ஒன்று
கண்டுபிடிக்கப்பட்டதால், பிரித்தானிய இராணுவ வெடிகுண்டுப்
படை மற்றும் பொலிசார் சுற்றி வளைத்தனர் .

கென்ட்டின் டார்ட்ஃபோர்டில் உள்ள ப்ராஸ்பெக்ட் பிளேஸில் உள்ள,
கடைகளில் இருந்து கடைக்காரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பிரித்தானிய இராணுவ வெடிமருந்து நிபுணர்கள் ,
சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர் ,குறித்த பொதியை
வெடிகுண்டு செயலிழக்கும் ரோபோ உதவியுடன் சோதனை செய்ய பட்டது

இவ்வேளை அருகில் உள்ள கடைகள் யாவும் பூட்ட பட்டு மக்கள்
வெளியேற்ற பட்டனர் .


குறித்த பொதியை யார் அவ்விடத்திற்கு எடுத்து வந்தது என்பது தொடர்பில் ,இதுவரைதெரியவரவில்லை .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இந்த சம்பவத்தால் சில மணித்தியாலங்கள் அங்கு பதட்டம் நிலவியது .