பிரான்ஸுக்கு அனுப்புவதாக மோசடி ஒருவர் கைது

சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது

பிரான்ஸுக்கு அனுப்புவதாக மோசடி ஒருவர் கைது

பிரான்சுக்கு அனுப்புவதாக தெரிவித்து இளைஞர் யுவதிகளிடம் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணம் மற்றும் கடவுச்சீட்டுகள் என்பவற்றை பெற்று மோசடி செய்த ஒருவர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகமை பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஒருவரே கைதானதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேகநபருக்கு எதிராக பொலிஸாருக்கு 8 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்தநிலையில் சந்தேகநபர் நீர்கொழும்பு நீதிவானிடம் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து அவரை எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது