பாதாள உலக குழுவினருக்காக கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை மோசடி தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் கைது

Spread the love

பாதாள உலக குழுவினருக்காக கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை மோசடி தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் கைது

கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை மோசடி தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச செயலக எழுதுவினைஞர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மூவர் கைது செய்யப்பட்டு சந்தேகத்தின் பேரில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளினை அடுத்து இரு அரச உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதாள உலக குழுவினருக்காக கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை மோசடி தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கான அனுமதிப் பத்திரத்தை பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அனுராதபுரம் பிரதேச செயலக உதவி முகாமையாளர் மற்றும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக எழுதுவினையர் ஆகியோர் கொழும்பு குற்றப்பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதாள உலக குழுவுடன் சேர்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற இவர்கள் உதவியதாக கூறப்படுகின்றது.

Author: நலன் விரும்பி