பாகிஸ்தானில் 7 ஆசிரியர்கள் சுட்டு கொலை

பாகிஸ்தானில் 7 ஆசிரியர்கள் சுட்டு கொலை

பாகிஸ்தானில் 7 ஆசிரியர்கள் சுட்டு கொலை

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பள்ளி ஒன்றில்,
வியாழக்கிழமை துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்
ஏழு ஆசிரியர்கள் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள
பராச்சினாரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்த
துப்பாக்கிச் சூடு இடம்பற்றுள்ளது

துப்பாக்கிச் சூடு நடந்தபோது பள்ளியில் மாணவர்கள்
ஆண்டுத் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.

இச்சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும்,
இது தீவிரவாதத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என போலீசார்
சந்தேகம் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .