பளை கோர விபத்தில் 13 வயதுடைய மாணவன் மரணம்

பளை கோர விபத்தில் 13 வயதுடைய மாணவன் மரணம்
Spread the love

பளை கோர விபத்தில் 13 வயதுடைய மாணவன் மரணம்

பளை – முல்லையடி பகுதியில் ஏ9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதை மாறுவதற்காக துவிச்சக்கரவண்டியில் வீதியின் ஓரமாக நின்று கொண்டிருந்த சிறுவனை யாழ் நோக்கி வேகமாக பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று மோதித்தள்ளியுள்ளது.

இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் பளை முல்லையடியைச் சேர்ந்த 13 வயதுடைய ராஜபாஸ்கரன் ஜதுர்சிகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய கெப் ரக வாகனம் தப்பி சென்ற நிலையில், சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்