பற்றி எரிந்த கப்பல் சுற்றி வளைத்த இராணுவம்

பற்றி எரிந்த கப்பல் சுற்றி வளைத்த இராணுவம்

பற்றி எரிந்த கப்பல் சுற்றி வளைத்த இராணுவம்

மலேசியா நாட்டின் தெற்கு கடற்கரையில் பயணித்த எண்ணெய் கப்பல் ஒன்று திடீரென தீ பிடித்து கொண்டது .

தீப்பிடித்த எண்ணெய் டேங்கரில் இருந்து ஊழியர்கள் கடலில் குதித்தனர் ,
அருகில் பயணித்த மூன்று கப்பல்கள் 25 பேரை காப்பாற்றியது ,ஆனால் தொடர்ந்து மூன்று பணியாளர்கள் காணாமல் போயுள்ளனர் .

காணாமல் போன மூவரை தேடி இராணுவம் , கடல் படை என்பன
இணைந்து தேடுதலை நடத்தி வருகின்றன .

பற்றி எரிந்த கப்பல் சுற்றி வளைத்த இராணுவம்

கப்பல் தீ பிடித்த பொழுதும் அருகில் பயணித்த கப்பல்களுக்கு,
தீ பரவல் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது .

சீனாவில் இருந்து சிங்கப்பூர் பயணித்த கப்பலில்,
தீ விபத்து ஏற்பட்டபோது, ​​அடர்த்தியான, கரும் புகை சூழ்ந்ததாக ,
மலேசிய கடல் சார் அமுலாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .