பருப்பு போளி செய்வது எப்படி |சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க

பருப்பு போளி செய்வது எப்படி |சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க
Spread the love

பருப்பு போளி செய்வது எப்படி |சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க

பருப்பு போளி செய்வது எப்படி செய்வது என்கின்ற கவலையை விடுங்க மக்களே .சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க வீடே மணக்கும் ,சிறுவர்கள் முதல் பெரியவங்க வரை ,கேட்டு வாங்கி உன்பாங்க .

வாங்க இப்போ பருப்பு போலி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

சுவையான பருப்பு போளி செய்முறை

பாத்திரம் ஒன்று எடுத்து அதற்குள் ,ஒரு கப் அளவுக்கு பருப்பு எடுத்து
,தேவையான தண்ணீர் விட்டு ,மூன்று தடவை நன்றாக கழுவி எடுங்க .

நனறாக கழுவி எடுத்த பின்னர் ,
புதிய தண்ணி விட்டு ஒருமணிநேரம் நன்றாக ஊற வைத்திடுங்க .

கடை சுவையில் பருப்பு போளி செய்திட தேவையான பொருட்கள்

இப்போ மேல் மாவு பிசைய ஒரு பாத்திரம் எடுத்து அதற்குள்ள ,
ஒன்றை கப் அளவுக்கு மைதா மா ,எடுத்திடுங்க .
அது கூடவே அரை கப் அளவுக்கு, கோதுமை மா ,தேவையான உப்பு ,
சிறிய அளவு மஞ்சள் ,ஒன்றை தேனீர் கரண்டி எண்ணெய் ,
சேர்த்து நன்றாக சேர்த்து மாவை பிசைந்து எடுங்க .
அப்புறம் தேவையான தண்ணீர் சேர்ந்து நன்றாக
சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து எடுங்க .

இரண்டு மணி நேரம் அந்த மாவை ஊற வைத்திடுங்க

இப்போ பருப்பு போலி செய்முறை இரண்டு

ஊறவைத்த கடலை பருப்பை எடுத்து நன்றாக கழுவி எடுத்து,
குக்கரில் போட்டு ,நெய் ,மஞ்சள் சேர்த்து குக்கரிலில் மூடி
வேக வைத்திடுங்க .

அப்புறம் அதை எடுத்து நனறாக ஒரு கரண்டியால நன்றாக மசித்து எடுங்க கீழே உள்ளது போல .

பருப்பு போளி செய்வது எப்படி |சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க

பருப்பு போளி கரண்டியால நன்றாக மசித்து எடுங்க
பருப்பு போளி கரண்டியால நன்றாக மசித்து எடுங்க


இப்போ கடாய வைத்து அதில ஒன்றரை கப் வெள்ளம் ,தேவையான தண்ணி விட்டு கரைஞ்சு வரும் வரை விடுங்க .

வெல்ல கரைசல வடி கட்டி எடுங்க ,அப்புறம் வேகா வைத்தி மசித்து வாய்த்த கடலை பருப்பை

வெல்ல கரைசல்
வெல்ல கரைசல வடி கட்டி எடுங்க


இது கூட கொட்டி கலந்திடுங்க .இது கூடவே பாதி தேங்காய் துருவல் சேர்த்திடுங்க உப்பு ,ஏலக்காய் ,போட்டு கலந்து திக் ஆகும் வரை எடுத்திடுங்க

ஆறியதும் அதை உருண்டையுங்க பிடித்து எடுத்திடுங்க ,

பருப்பு போலி பூரணம் உருண்டை
பருப்பு போலி பூரணம் உருண்டை


அப்புறம் ஊற வாய்த்த மாவை எடுத்து அதையும் சப்பாத்திக்கு போல
உருண்டையாக மாவு பிடித்து வைங்க ,

அப்புறம் மாவு தட்டியதுக்க, உருண்டை பூரணத்தை உள்ள வைத்து
முழுவதுமாக மூடி விடுங்க -மோதகம் போல .

பருப்பு போளி  மாவு உருண்டை தட்டி எடுத்தால்

அப்புறம் அதை ,திருப்பி வைத்து பர்ரோட்டோ மாதிரி பூரணம் வெளியில் வராத மாதிரி அழுத்தி தட்டி எடுங்க .

இப்போ பருப்பு போளி இறுதி செய்முறை மூன்று

இப்போ அடுப்பில தோசை கல்லை வைத்து நன்றாக பாராட்டோ போல ,
சுட்டு எடுங்க ,இரண்டு பக்கமும் நன்றாக சுட்டு எடுங்க .

கோல்டன் கலருக்கு வந்ததும் எடுத்திடுங்க .இப்போ டீ கூட இந்த அருமையான ,சுவையான பருப்பு போளி ,சாப்பிட்டு பாருங்க .


செமையாக இருக்கும் ,கடை பருப்பு போளி போல பஞ்சு போல சாப்டா இருக்கும் .அவ்வளவு தாங்க மக்களே .