பதட்டத்தில் நாடு- வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள்

பதட்டத்தில் நாடு வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள்

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் இரண்டு பதிவாகியுள்ளன.

கொட்டகலை, பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் வீடு ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இரவு 07.00 மணியளவில் இடம்பெற்றதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

சமைத்துக் கொண்டிருந்த போது அடுப்பு திடீரென வெடித்து சிதறியுள்ளது. அடுப்புக்கு பாவிக்கப்பட்டுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டர் பொங்கியிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை.

இதேவேளை, கொட்டகலை சிமோல் டிரேட்டன் தோட்டத்தில் குடியிருப்பாளர்கள் சமையல் செய்து கொண்டிருந்த போது, திடீரென அடுப்பு வெடித்தது.

இந்த வெடிப்பு சம்பவத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் திம்புள்ள பத்தனை பொலிஸார் இவ்விரு சம்பவ இடங்களுக்கும் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்..

    Author: நலன் விரும்பி

    Leave a Reply