நெருப்போடு விளையாடும் கீர்த்தி பாண்டியன்

Spread the love

நெருப்போடு விளையாடும் கீர்த்தி பாண்டியன்

தும்பா மற்றும் அன்பிற்கினியாள் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி பாண்டியன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

நெருப்போடு விளையாடும் கீர்த்தி பாண்டியன்… வைரலாகும் வீடியோ
கீர்த்தி பாண்டியன்


தமிழ் திரையுலகில் 80-களில் முன்னணி நடிகராக இருந்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர், ‘தும்பா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.

பிறகு தனது அப்பா அருண் பாண்டியனுடன் இணைந்து ‘அன்பிற்கினியாள்’ என்ற படத்தில் நடித்தார். தற்போது கதாநாயகியை மையப்படுத்தி உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

கீர்த்தி பாணியன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார். இதற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவிப்பார்கள். இந்நிலையில், கீர்த்தி

பாண்டியன் நெருப்போடு விளையாடும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார். இது ரசிகர்களிடையே கவனம் பெற்று வைரலாகி வருகிறது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply