நீ சிரித்தால் நான் உயிர் வாழ்வேன்

Spread the love

நீ சிரித்தால் நான் உயிர் வாழ்வேன்

அழகாய் நாலு மொழி பிடித்து
அன்பே அன்பே நீ பேசு …..
ஆயூள் பூராய் நான் மகிழ
அன்பாய் நீயும் உறவாடு ….

ஆறுதல் கூற நீ இருந்தால்
ஆயூள் நூறு கூடுமடி
விண்ணை பிடித்து நான் வரவே- உன்
வின் விழி ஒன்றே போதுமடி ….

நீ சிரித்தால் நான் உயிர் வாழ்வேன்
நீ சிரித்தால் நான் உயிர் வாழ்வேன்

நெஞ்ச குழியில் நீ இருந்து
நெருடும் நெருடல் பிடிக்கிறதே …
கன்ன குழியில் உட்காரும்
காதல் சிரிப்பு பிடிக்கிறதே ….

சலங்கை சத்தம் காதில் விழ – விழி
சாளரம் மெல்ல திறக்கிறதே
குறும்புகள் எறியும் விழி ஒன்றில்
கோடி ஆண்டுகள் நான் வாழ்வேன் …

வா வா தென்றலே
வந்து என்னில் மோது ….
நூறாண்டு நான் மகிழ
நூலிடையால் தழுவு …!

வன்னி மைந்தன் (ஜெகன் – T)
அக்கம் -04/08/2017

Leave a Reply