நீதவானுக்கு லேசர் பாய்ச்சிய ஆசிரியர் கைது
நீதிமன்ற அமர்வின் போது கடுவலை நீதவான் மீது லேசர் ஒளி பாய்ச்சிய குற்றச்சாட்டின் பேரில், தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு , செப்டெம்பர் 27 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
நீதிமன்ற பதிவாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான ஜனித் டயஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் சந்தேக நபரை பரிசோதித்த போது அவரிடமிருந்து லேசர் கருவியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
நீதவானுக்கு லேசர் பாய்ச்சிய ஆசிரியர் கைது
சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சந்தேக நபர் மனநலம் குன்றியவர் என அவரின் பெற்றோர் தெரிவித்ததாகவும் அதுபற்றிய வைத்திய அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்கமுடியுமெனவும் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரை எதிர்வரும் செப்டெம்பர் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபரின் மனநிலை குறித்து மனநல வைத்தியசாலையிலிருந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.