நிர்வாண புகைப்படம்: பெண் கைது: பெண் கைது

நிர்வாண புகைப்படம்: பெண் கைது
Spread the love

நிர்வாண புகைப்படம்: பெண் கைது

தனது கணவரின் சகோதரியின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பெண் ஒருவர் கண்டி கணினி குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக கண்டி கணினி குற்றத்தடுப்பு பிரிவிற்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிர்வாண புகைப்படம்: பெண் கைது

மாத்தளை பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய இந்த பெண் தனது நண்பர்கள் மத்தியில் வட்ஸ்அப் சமூக ஊடக வலையமைப்பின் ஊடாக நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான பெண் தனது மைத்துனருடன் சில காலமாக நல்லுறவில் இருந்து வந்ததாகவும் தற்போது கோபமடைந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் நேற்று (08) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.