
நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவை பெண் எம்பிக்கள் சந்தித்தனர்
நியூசிலாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர்களான ஜெசிந்தா
ஆர்டெர்ன் மற்றும் ஹெலன் கிளார்க் ஆகியோரை அண்மையில் சந்தித்ததாக நாடாளுமன்ற ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, சீதா அரம்பேபொல, ரோஹினி குமாரி விஜேரத்ன, பவித்ராதேவி வன்னியாராச்சி, கீதா சமன்மலி குமாரசிங்க, தலதா அத்துகோரள, கோகிலா
குணவர்தன, முதித பிரிஷாந்தி, ராஜிகா விக்கிரமசிங்க, மஞ்சுளா திஸாநாயக்க, பாராளுமன்ற பொதுச் செயலாளர் ஹரிஷானி குமரசூரிய
ரோஹணதீர, உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) இந்திரா திஸாநாயக்க மற்றும் பாராளுமன்ற ஊடக முகாமையாளர் நிம்மி ஹதியால்தெனிய ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.