நான் வாழ நீ வேண்டும் …!

நான் வாழ நீ வேண்டும் …!

தொட்டு தொட்டு பேசும் விழி
தொடாமலே சிரிக்கும் கன்ன குழி
உன்னில் கண்டு வியந்தேனே
உள்ளம் இதை தொலைத்தேனே

கஞ்சம் இல்லா கொஞ்சும் மொழி
கட்டி தழுவும் பிஞ்சு விழி
தொட்டு பேசும் எண்ணத்திலே
தொடாது பேசும் மஞ்சத்திலே

நீரில் கலந்த பால் பிரிக்கும்
அன்ன பறவை நீ தானோ
வர்ணம் காட்டும் வானவில்லோ
வாசம் வீசும் பூவிதலோ

ஆயிரம் பூக்களில் நீ அழகு
ஆனந்தம் வீசும் பேரழகு
உன்னை மணந்தால் வாழ்வழகு
உன்னாலே காண்பேன் நான் மகிழ்வு

நான் வாழ நீ வேண்டும்
நான் ஆழ உனை வேண்டும்
நீதானே நான் வாழும் காலம்
நீந்தி கரை ஏறும் ஓடம் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 27-12-2021

    Leave a Reply