
நாட்டைவிட்டு வெளியேறியுள்ள 50 விசேட வைத்தியர்கள்
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 50 விசேட வைத்தியர்கள், நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை விசேட வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அவசர விபத்துப் பிரிவு விசேட வைத்தியர்கள் 20 பேரும், மயக்க மருந்துவ நிபுணர்கள் 30 பேரும், இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை, அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், விசேட வைத்தியர் அசோக குணரத்ன கூறியுள்ளார்.
இதன் காரணமாக, விசேட வைத்தியர்களைப் பயிற்றுவிக்கும் பணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்