
நாங்கள் இனவாதிகள் இல்லை ஸ்ரீதரன்
தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன் போது இன்றைய தினம் (23) இடம்பெற்ற நீதிமன்ற வழக்கு தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்கள் சார்பாக போராட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டமை சார்பாக தவறாக குற்றம் சாட்டப்பட்டு இன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு பிற்போடப்பட்டுள்ளது.
மேலும் குருந்தூர் மலைக்கு உதய கம்பன்பில வருகை மற்றும் இனவாதம் பேசும் இனவாதிகள் யார் என்பது குறித்தும், தலைவர் பிரபாகரனின் மரபு அறிக்கை மற்றும் மருந்து தட்டுபாடு உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கருத்து தெரிவித்துள்ளார்.