சுத்தியலுடன் நயன்தாரா… வைரலாகும் வீடியோ

இதனை SHARE பண்ணுங்க

சுத்தியலுடன் நயன்தாரா… வைரலாகும் வீடியோ

தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, கையில் சுத்தியலுடன் வரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கையில் சுத்தியலுடன் நயன்தாரா… வைரலாகும் வீடியோ
நயன்தாரா


தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நடித்துள்ள படம் ‘ராக்கி’. அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி உள்ளார். இயக்குனர் பாரதிராஜாவும்

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாக இருக்கும்

நிலையில், இதன் புரமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் நயன்தாரா

சுத்தியலுடன் வந்து ‘காலம் ஒரு துரோகி…’ என்று வசனம் பேசுகிறார். இந்த புரமோ வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


இதனை SHARE பண்ணுங்க

Author: நலன் விரும்பி

Leave a Reply