நண்டு மசாலா கிரேவி செய்வது எப்படி தோசை இட்லி சாதம் சப்பாத்திக்குசெமை தூக்கல்

நண்டு மசாலா கிரேவி செய்வது எப்படி தோசை இட்லி சாதம் சப்பாத்திக்குசெமை தூக்கல்
Spread the love

நண்டு மசாலா கிரேவி செய்வது எப்படி தோசை இட்லி சாதம் சப்பாத்திக்குசெமை தூக்கல்

நண்டு மசாலா கிரேவி செய்வது எப்படி தோசை இட்லி சாதம் சப்பாத்திக்குசெமை தூக்கல்

நண்டு மசாலா கிரேவி நாம வீட்டில் செய்வது எப்படி ..? என்ற உங்கள் கேள்விக்கு இதில் பதில் .நண்டு கிரேவி தோசை சாதம் கூட
சேர்த்து சாப்பிட்டால் சுவையோ செமை தூக்கலாக இருக்கும் .

அவ்வாறான நண்டு கிரேவி செய்வது ,எப்படி என்பதை இதில் பார்க்கலாம் வாங்க

நண்டு கிரேவி செய்வது எப்படி ..?
இந்த நண்டு கிரேவி செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?

வாங்க இப்போ நண்டு கிரேவி செய்முறைக்குள் போகலாம் .

செய்முறை ஒன்று

வீட்டில் சுவையான நண்டு கிரேவி ,சமையல் செய்திட ,அடுப்பில கடாய சூடாக்கி கொள்ளுங்க .

அதில மூன்று மேசை கரண்டி எண்ணெய் சேர்த்திடுங்க .எண்ணெய்
சூடானதும் ஒரு கரண்டி சோம்பு ,ஒருகரண்டி வெந்தயம் ,கூடவே ஒரு கொத்து கருவேப்பிலை நன்றாக சேர்த்து வதக்கி வாங்க .

அப்புறம் இரண்டு பெரிய வெங்காயம் பொடியாக வெட்டி கலந்திடுங்க ,கூடவே தேவையான உப்பு ,கொஞ்சம் மஞ்சள் ,சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .

வெங்காயம் கொஞ்சம் வதங்கிய பின்னர் ,இரண்டு பச்சைமிளகாய் கீறி சேர்த்திடுங்க .


வெங்காயம் நன்றாக வதங்கி வந்த பின்னர் ,இஞ்சி பூண்டு சேர்த்து ,அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கி வாங்க .பெரிய தக்காளி இரண்டு பொடியாக வெட்டி கலக்கி வாங்க .

அது வதங்கி வருவதற்கு முன்பாக, நம்ம நண்டுக்கு ஏற்ப ,மசாலா தயார் செய்யலாம் .

மிக்சியில் இரண்டு கரண்டி மிளகு ,ஒரு கரண்டி சீரகம் ,வெட்டிய தேங்காய் கொஞ்சம் சேருங்க .இப்போ இவற்றை சேர்த்து நனறாக அரைத்து வாங்க
தேவை பட்டால் தண்ணி கொஞ்சம் சேர்த்து அரைத்து வைத்திடுங்க .

முதல்ல நன்றாக அரைத்தவுடன் ,அப்புறம் தண்ணி சேர்த்து அரைத்திடுங்க நன்றாக இருக்கும் .


இப்போ வதக்கி வரும் பொருளுடன் ,ஒரு கரண்டி மஞ்சள் ,ஒரு கரண்டி மிளகாய் தூள் ,மசாலா தூள் ,தேவையான உப்பு ,சேர்த்து மீளவும் நனறாக வதக்கி வாங்க .மசாலா பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கி வாங்க .

அதன் பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள நண்டுகளை சேர்த்திடுங்க .அப்புறம் இந்த மசாலா நன்றாக துண்டுடன் சேரும் வரைக்கும் வதக்கி வாங்க .


மசாலா நன்றாக நண்டுடன் ஒட்டி பிடித்த பின்னர் ,தேவையான தண்ணீர் சேர்த்திடுங்க .நண்டு முழுமையாக வெந்து வரும் அளவுக்கு தண்ணி சேர்த்திடுங்க .

இப்போ மூடி போட்டு மூடி ,நண்டில் எண்ணெய் பிரிந்து வரும் வரைக்கு காத்திருங்க .பத்து நிமிடம் பின்னர்
அரைத்து வைத்த மசாலா கலவையை ஊற்றி ,நனறாக கலக்கி வாங்க .


மறுபடியும் 10 நிமிடம் மூடி போட்டு மூடி நன்றாக வேக வைத்திடுங்க .இப்போ மசாலா பச்சை வாசம் போயிடுச்சு .இப்போ நனறாக சப்பாத்தி ,தோசை ,இட்லி கூட சேர்த்து சாப்பிடுங்க நன்றாக இருக்கும் .

இப்போ நண்டு கிரேவி ரெடியாகிடிச்சு .இதுபோலவே நாளும் செய்து வாங்க ,செமை தூக்கலாக இருக்கும் ,.


சிறியவர்கள் வரை ,பெரியவர்கள் வரை ,அதிகம் விரும்பி சாப்பிடும் கடல் உணவுகளில் ,நண்டு முக்கிய இடம் வகிக்கிறது .


மக்களே நண்டுகறி எப்படிங்க ..? தலைவரே மெது வா சாப்பிடுங்க தொண்டையில் சிக்கிட போகுது


Author: நலன் விரும்பி

Leave a Reply