தெஹிவளையில் கைகுண்டு மீட்பு

தெஹிவளையில் கைகுண்டு மீட்பு
Spread the love

தெஹிவளையில் கைகுண்டு மீட்பு

தெஹிவளையில் கட்டிடமொன்றில் இன்று (06) புதன்கிழமை காலை கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ​பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில், கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்

ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தெஹிவளை பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

தெஹிவளையில் கைகுண்டு மீட்பு

பின்னர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் கைக்குண்டு மீட்கப்பட்டது.

இலக்கம் 124 அனகாரிக தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் கைவிடப்பட்ட நிர்மாணத் தளமாகவே உள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.