
துருக்கியியில் 56 நாட்களின் பின்னர் தாயுடன் இணைந்த சிசு
துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் ,பிரிந்த தாயும் சிசுவும்,
ஒன்றாக இணைந்துள்ள அதிசயம் நடந்துள்ளது .
Vetin என்று அழைக்கப்படும் மூன்றரை மாத வயதுடைய அதிசயக் குழந்தை,
பிப்ரவரி 6 நிலநடுக்கத்திற்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு,
எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லாமல், Hatay மாகாணத்தில் ஒரு கட்டிடத்தின்,இடிபாடுகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
பேரழிவு நடந்த 54 நாட்களுக்குப் பிறகு ,
அதானா நகரில் உள்ள மருத்துவமனையில் ,
அவரது தாயார் யாசெமின் பெக்தாஸ் சிகிச்சை பெற்று வந்தார் ,
அவருடன் சிசு ஒப்படைக்க பட்டுள்ள அதிசயம் நடந்துள்ளது .
ஒரு தாயையும் அவரது குழந்தையையும் ,
மீண்டும் இணைப்பது உலகின் மிக மதிப்புமிக்க பணிகளில் ஒன்றாகும்,
என்று குடும்ப மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் டெரியா யானிக் தெரிவித்தார் .