
துப்பாக்கி சூடு ஒருவர் காயம்
பேலியகொட, களுபள்ளம் பிரதேசத்துக்கு அருகில் இன்று (17) காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டதில் 32 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன்,
சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் அண்மையில் விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.