துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி | இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பதவிய, புல்மோட்டை ஆறாம் கட்டை மஹசென்புர பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

38 வயதான ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 8.30 அளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.