துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் மரணம்

வீதியில் நடந்த துப்பாக்கி சூடு
Spread the love

துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் மரணம்

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பன்வெல கெத்பஹூவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சிறுவன் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் மரணம்

வயல்வெளியிலிருக்கும் குடிசையில் தனித்திருக்கும் போது குறித்த சிறுவன் துப்பாக்கியைக் கையாண்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதையடுத்து, வயலில் அன்றாட வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த சிறுவனின் பெற்றோர், குடிசைக்கு விரைந்து வந்து பார்த்த போது சிறுவன் காயமடைந்து கிடந்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.