
துபாயில் அடுக்குமாடியில் தீ இந்திய தம்பதிகள் உள்ளிட்ட 16 பேர் மரணம்
துபாயில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியாகினர்,
மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர் .
அல்-ராஸ் பகுதியில் உள்ள கட்டிடத்தின்,
நான்காவது மாடியில் சனிக்கிழமை நண்பகல் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சிக்கி இந்தியா மலையாள தம்பதிகள் உள்ளிட்ட
16 பேர் பலியாகியுள்ளனர் .
காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது,இங்கு வெளிநாட்டவர் அதிகம் வசிக்கும் கட்டட பகுதியில் தீ பரவல் இடம்பெற்றுள்ளது .
இறந்தவர்களில் பலர் அடையாளம் காணப்படவில்லை .
குறித்த தீ விபத்து தொடர்ப்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .