தமிழ் நாடே அழிக …!
ஆழ குழி நீ இருந்து
அழுத குரல் கேட்கலையோ ..?
நீதி சொல்லும் மாந்தர் எல்லாம்
நினைவே உன்னே மீட்கலையே ….
நாலு நாள் உள்ளுக்குள்ளே – சுஜித்
நாவறண்டு நீ கிடந்தாய் …
நாம் தமிழர் ஆட்சியதாம்
நம்பி வந்து மீட்கலையே …..
தேய் பிறையாய் நாள் கழிய
தேகமதில் உயிர் பிரிய …..
பாலகனே நீ மறைந்தாய்
பாதகரே கொன்றனரே ….
ஐந்தடியில் நீ இருக்க
ஐ விரல்கள் மீட்கலையே ….
எண்பதடி நீ கழிய
ஏறிவந்தார் பிடிக்கலையே …
ஒப்புக்கு அழுது நின்றார்
ஓடி செய்தி சொல்லி வந்தார் ..
குழியினுள்ளே நீ தவிக்க
குரல் உயர்த்தி பேசி நின்றார் ….
பாலகனே உன் வலியை
பாதகர் புரியலையே ….
நோகும் உந்தன் உடல் மீட்க
நொந்து விழி சிவக்கலையே ….
என்ன இது தமிழ் நாடு
ஏனிந்த சூடு காடு ….?
எரிந்து இன்று சாம்பலாக …
ஏ மனமே சாபமிடு ….!
- வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -29-10-2019
25-10-219 தமிழகம் ,திருச்சியில் ,ஆழ்துளை குழியில் வீழ்ந்து சாவடைந்த பாலகன் சுஜித் மரண தவிப்பின் ,எதிரொலியை ,,அவன் பாதத்தில் சமர்ப்பணம் ஆக்குகிறேன்