தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை மீனவர்கள்

தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை மீனவர்கள்
Spread the love

தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை மீனவர்கள்

இலங்கை மீனவர்கள் மூன்று பேர் படகு பழுதடைந்ததால் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – எழுகைதீவில் இருந்து கடந்த 6 ஆம் திகதி காலை 9 மணிக்கு பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களும் மதியம் 2 மணியளவில் இஞ்சின் பழுதடைந்ததால் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – ஆனைகோட்டை, குருநகர் மற்றும் வல்வட்டிதுறை பகுதிகளை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு இந்தியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.