
தமிழரசு கட்சியினரால் துயிலுமில்லங்களில் சிரமதானப் பணி
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் கிளிநொச்சி தமிழரசு
கட்சியினரால் நேற்றையதினம் (24) திகதி சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் சி். சிறிதரன் தலைமையில் நடைப்பெற்றது,
நவம்பர் மாதம் (27) ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் இச் சிரமதான பணி மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.