
தப்பி ஓடிய கைதி நீதிமன்றில் சரண்
போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பூகொட நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைவிலங்குகளை கழற்றி விட்டு தப்பிச் சென்று அளுத்கடை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளதாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர்.
கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்த துஷ்மந்த அவிஷ்க என்ற சந்தேக நபர் கடந்த மே மாதம் 9ஆம் திகதி கிரிந்திவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர் பூகொட நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று சிறைச்சாலை ஊடாக அளுத்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நோக்கில் மே 9 ஆம் திகதி கிரிந்திவெல பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் கைவிலங்குடன் பூகொட நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பூகொட நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, கைவிலங்குகள் தளர்ந்து காணப்பட்டதையடுத்து, அவர் அவற்றைக் கழற்றி விட்டு ஓடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவ்வாறான கைதியே இபொழுது நீதிமன்றில் சரண் அடைந்துள்ளார்