தந்தையை வெட்டிக் கொன்ற மகன்கள்

திருமண நிகழ்வில் ஒருவர் அடித்து கொலை | உலக செய்திகள்

தந்தையை வெட்டிக் கொன்ற மகன்கள்

தந்தையின் துன்புறுத்தலைத் தாங்க முடியாத 3 பிள்ளைகள் அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவி்க்கின்றனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் கொடிகாமம் மிரிசுவில் பகுதியைச் சேர்ந்த 21, 20 மற்றும் 28 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சகோதரர்கள் மூவரும் சேர்ந்து கொலையை செய்து இருப்பதாகவும் கொலை செய்யப்பட்ட 44 வயதுடைய அவர்களின் தந்தை, கராத்தே சிவா என அழைக்கப்படும் சிவசோதி சிவகுமார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்களிடம் பொலிஸார் விசாரணை நடாத்திய போது, சிறிது காலமாக தந்தையின் தொல்லை தாங்க முடியாததால் அவரை வெட்டிக் கொன்றதாக தெரிவித்துள்ளனர்.