தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர் பலி

ரயில் மோதி வாலிபன் மரணம்

தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர் பலி

இன்று (02) காலை எரிபொருள் ஏற்றிச் செல்லும் புகையிரத தண்டவாளத்தில் அமர்ந்திருந்த ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த நபர், வாத்துவ மொல்லிகொட, சாந்த பற்றிக் வீதியில் வசித்து வந்த குணசிங்க சமந்த சந்திரகுமார சில்வா என்ற 36 வயதானவர் ஒரு பிள்ளையின் தந்தையென பொலிஸார் தெரிவித்தனர்.

மருதானையிலிருந்து மாத்தறை செல்லும் எரிபொருள் ஏற்றிச் செல்லும் புகையிரதம் மொல்லிகொட பிரதேசத்தில் வைத்து குறித்த நபரை மோதியதால் அவர் உயிரிழந்ததுடன் சடலம் களுத்துறை வடக்கு புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடாத்தி வருகின்றனர்.