
ஜெர்மனியில் வெடித்து சிதறிய மாடி பொலிஸார் உள்ளிட்ட 12 பேர் காயம்
கடந்த தினம் மேற்கு ஜேர்மனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ,
ஏற்பட்ட வெடிவிபத்தில் ,12 அவசரகால சேவை ஊழியர்கள் காயமடைந்தனர்,
இந்த வெடிப்புக்கான காரணம் என்ன என்பது தொடர்பாக தெரிவிக்க படவில்லை .
பத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்,
அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்
வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற அடுக்குமாடி குடியிருப்பில்
57 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,
சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்
பொலிஸார் தெரிவித்தனர்.