சொத்துக்களை சேதப்படுத்திய 58 பேர் இதுவரை கைது
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடு ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்தியதுடன் பொலிஸ் அதிகாரியை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 58 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், கைதான 32 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 26 பேரை எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டது.
பெண் ஒருவரின் படங்களை கணிணி ஊடாக செம்மையாக்கம் செய்து, சமூக ஊடங்களில் பதிவேற்றியதாக சந்தேகித்து ஜுன் மாதம் 28 ஆம் திகதி இரவு அச்சுவேலி நீர்வேலி பகுதியிலுள்ள சிலர், குறித்த பகுதியில் உள்ள வீ்டு ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த இரு இளைஞர்களை தாக்கியதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தனர்.
சொத்துக்களை சேதப்படுத்திய 58 பேர் இதுவரை கைது
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸாரால், அமைதியின்மையை கட்டுப்படுத்த வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், மேலும் 24 சந்தேகநபர்கள் கைது செய்யபட்டனர்.
24 சந்தேகநபர்களையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டனர்.
பெண்கள் 4 பேருக்கும் பிணை வழங்கப்பட்டதுடன், ஆண்கள் 20 பேருக்கும் எதிர்வரும் ஜுலை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
- 34கோடியில் லண்டனில் புலிகள் காணி 137 ஏக்கர் காணி
- திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்
- ரணிலுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு தடுத்து நிறுத்திய பொலிஸார்
- லொறி மீது வேன் மோதி கோர விபத்து இந்தியர் பலி
- புலிகள் கட்சி ரணிலுக்கு ஆதரவு
- ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று
- பொது வேட்பாளர் பொதுக்கூட்டம்
- மக்கள் சந்திப்பு சங்கு கட்சி
- தம்பிராசா பிணையில் விடுதலை
- 10 ஆயிரம் ரூபாவுக்காக நடந்த கொலை