சூட்கேஸில் 8 வயது சிறுமி கடத்தல்

சூட்கேஸில் 8 வயது சிறுமி கடத்தல்
Spread the love

சூட்கேஸில் 8 வயது சிறுமி கடத்தல்

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிறுமி ஒருவர் சூட்கேஸில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் பிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ளது.

8 வயது சிறுமி சூட்கேசில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட போது வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டிற்கு வந்த சிறுமியின் தாய் சிறுமி இல்லாததை கண்டு உடனடியாக சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டுள்ளார்.

சூட்கேஸில் 8 வயது சிறுமி கடத்தல்

இதன்போது வீட்டு வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சூட்கேஸ் ஒன்றை கொண்டு சென்ற நபர் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சூட்கேஸில் கடத்திச் செல்லப்பட்ட சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வீட்டுப் பணியாளராக பணிபுரியும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குடியிருப்பாளர்களை பழிவாங்கவே சிறுமியை கடத்தி சென்றதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கெமராவில் இவ்வாறு பதிவாகி இருந்தது