சூடானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் மீட்பு

சூடானில் கடும் மோதல் 200 பேர் மரணம் 1800 பேர் காயம்

சூடானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் மீட்பு

சூடானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் குழுவொன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சூடானில் சிக்கியிருந்த 41 இலங்கையர்கள் தொடர்பில் தகவல் கிடைத்ததாகவும் அவர்களில் 13 பேர் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எஞ்சியவர்கள் இந்தியா அல்லது சவூதி அரேபியாவின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என அமைச்சர் எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்திருந்தார்.