சுவையான இட்லி சாதத்தில் செய்து அசத்துங்க ரெம்ப வாங்கி சாப்பிடுவாங்க

சுவையான இட்லி சாதத்தில் செய்து அசத்துங்க ரெம்ப வாங்கி சாப்பிடுவாங்க
Spread the love

சுவையான இட்லி சாதத்தில் செய்து அசத்துங்க ரெம்ப வாங்கி சாப்பிடுவாங்க

சுவையான இட்லி மிஞ்சிய சாதத்தில் வீட்டில் எவ்வாறு செய்து கொள்வது என்பதை இதில் பார்க்கலாம் .

சாதத்தில் சமையல் செய்திடும் இட்லி மிக மெருதுவாக இருக்கும் .அவ்வாறான இட்லியை கேட்டு வாங்கி ரெம்பவே பிள்ளைகள் சாப்பிடுவாங்க .
வாங்க இப்போ மிஞ்சிய சோறில் எவ்வாறு இட்லி செய்து கொள்வது என்பதை ,இந்த செய்முறை விளக்கத்தில் பார்க்கலாம் ,

சுவையான இட்லி சாதத்தில் செய்வது எப்படி செய்முறை விளக்கம் .
இரண்டு கப் அளவு சாதம் எடுத்து ,அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து , மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளுங்க .

அதன் பின்னர் அரைத்த சாதத்தை அப்படியே எடுத்து வேறு பாத்திரம் ஒன்றில் ஊற்றி வைத்திடுங்க
சுவை தரும் இட்லிக்கு தேவையான பொருட்கள்
இப்பபோ இட்லிக்கு தேவையான ரவையை எடுத்து ,அதனை அடுப்பில கடாய வைத்து சூடாக்கி வறுத்து கொள்ளுங்க .ரவை வாசம் வரும் வரைக்கும் அதனை நன்றாக வறுத்து கொள்ளுங்க .

வறுத்த ரவையை இப்பொழுது அரைத்து வைத்த சாதத்துடன் சேர்த்து ,அது கூட தயிர் ஒரு கப் ,
கூடவே கொஞ்சமா தண்ணீர் சேர்த்து நன்றாக கலவையுடன் சேர்த்து கலக்கி கொள்ளுங்க .

சுவையான இட்லி சாதத்தில் செய்து அசத்துங்க ரெம்ப வாங்கி சாப்பிடுவாங்க

இப்போ இந்த இட்லிக்கு தேவையான உப்பு கலந்து கொள்ளுங்க .உப்பு கலந்த பின்னர் நனறாக கட்டி இல்லாது அடித்து கலக்கி கொள்ளுங்க .
அதன் பின்னர் பத்து நிமிடம், மூடி வைத்து ஊறவைத்து கொள்ளுங்கா

தற்போது இட்டலி சுடும் அளவிற்கு இட்லி மா ரெம்ப பதமாக உள்ளது .பேர்கிங் பவுடர் கலந்து ,அதன் பின்னர் இட்லி தட்டில் இட்டலி மாவை ஊற்றி ,
பத்து நிமிடம் நன்றாக வேக வைத்து கொள்ளுங்க .

இப்பொழுது நமக்கு சுட சுட சூப்பரான இட்டலி ரெடியாகிடிச்சு .இந்த சுவையான
சாதத்தில் தயாரான இட்லிக்கு ,கூடவே பச்சை மிளகாய் சட்னி சேர்த்து சாப்பிடுங்க .

அசத்தல் சுவையினை உண்ணும் பொழுது காணலாம் .இவ்வளவு தாங்க வேலை
.சீக்கிரமாக மீதமான சாதத்தில் வீட்டில் இட்லி ரெடியாகிடிச்சு .

இதனை போன்று மக்களே நீங்களும் வீட்டில் விரும்பும் நேரம் ,மீதமான சாதத்தில் இட்லி செஞ்சு அசத்துங்க .
உங்க கூடவே சாப்பிட நானும் வருகிறேன் என்னையும் மறந்திடமா கூப்பிடுங்க உறவுகளே .

Author: நலன் விரும்பி

Leave a Reply