சீனாவுக்கு குரங்கு விற்கும் இலங்கை

சீனாவுக்கு குரங்கு விற்கும் இலங்கை

சீனாவுக்கு குரங்கு விற்கும் இலங்கை

சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு ஒரு இலட்சம் குரங்குகளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், குரங்குகளைப் பிடிப்பதற்காக தூரத்திலிருந்து இயக்கக்கூடிய சிறப்பு வகை கூடுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த கூடுகளைப் பயன்படுத்தி குரங்குகளை பிடிப்பதற்காக விசேட பயற்சிகளும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயிர்களை சேதப்படுத்தும் குரங்களை அகற்றும் பணிகளுக்கு அனைத்து விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்தது.