சிறுவனின் கையில் கற்பூரம் கொளுத்திய பிக்கு

சிறுவனின் கையில் கற்பூரம் கொளுத்திய பிக்கு

சிறுவனின் கையில் கற்பூரம் கொளுத்திய பிக்கு

தீய சக்திகளை விரட்டுவதற்காக சிறுவனின் உள்ளங்கையில் கற்பூரத்தை எரித்து சிறுவனைப் பலத்த காயத்திற்கு ஆளாக்கிய பௌத்த பிக்கு ஒருவர் வீரவில பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வீரவில குட கம்மன பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனே இவ்வாறு தீக்காயத்திற்கு ஆளாகியுள்ளார்.

பெற்றோரால் கைவிடப்பட்ட குறித்த சிறுவன் தனது பாட்டியுடன் வாழ்ந்து வந்துள்ளார். பாட்டி சிறுவனுக்கு ஜாதகம் பார்க்க, அருகில் உள்ள வீரவில கங்காதிலேகா ராம விகாரையிலுள்ள ஜோதிடரும் பேயோட்டுபவருமான பிக்கு ஒருவரிடம் சிறுவனை அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் கையில் கற்பூரம் கொளுத்திய பிக்கு

சிறுவனின் ஜாதகத்தை வாசித்த பிக்கு சில மத சடங்குகளை செய்ததுடன் தீய கிரக தோஷங்களைப் போக்க வேண்டுமெனக் கூறி சிறுவனின் கையில் கற்பூரத்தை பற்ற வைத்துள்ளார்.

காயமடைந்த சிறுவன் தெபரவேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பிக்கு திஸ்ஸமஹராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.