சிறுமியை திருமணம் செய்ய அழைத்துச் சென்றவர் கைது

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Spread the love

சிறுமியை திருமணம் செய்ய அழைத்துச் சென்றவர் கைது

15 வயதான சிறுமி ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி அழைத்துச் சென்ற இளைஞர் முல்லைத்தீவு கள்ளப்பாட்டு பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசுவமடுவினை சேர்ந்த குறித்த சிறுமியை காணவில்லை என கடந்த மாதம் சிறுமியின் பெற்றோரால் விசுவமடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறுமியை திருமணம் செய்ய அழைத்துச் சென்றவர் கைது

அதனையடுத்து, நேற்று (12) முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் வைத்து கள்ளப்பாட்டினை சேர்ந்த 26 வயதுடைய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு, மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட இளைஞரை தடுப்புக் காவலில் வைத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது கடந்த மாதம் இந்த இளைஞர் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.