சிறுபோகத்துக்கு இலவச உரம் விநியோகம்

சிறுபோகத்துக்கு இலவச உரம் விநியோகம்

சிறுபோகத்துக்கு இலவச உரம் விநியோகம்

2023 சிறுபோக நெற் செய்கைக்கு இலவசமாக ரீ.எஸ்.பி உரம் கமநல சேவை மத்திய நிலையங்களினூடாக விநியோகிக்கப்பட்டு வருவதாக, பாலமுனை கமநல சேவை மத்திய நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். அஷ்ரப் தெரிவித்தார்.

பாலமுனை கமநல சேவை மத்திய நிலைய பிரிவுக்குட்பட்ட விவசாய அமைப்புகளுக்கு கையளிக்கும் வைபவம், பாலமுனை உர களஞ்சிய சாலையில் நேற்று (27) நடைபெற்றது.

விவசாய அமைப்புகளினூடாக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 22 கிலோகிராம் ரீ.எஸ்.பி உரம் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய, கமத்தொழில் அமைச்சினால் நாடுதழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இலவச ரீ.எஸ்.பி உர விநியோகம், அம்பாறை மாவட்டத்தில் சகல கமநல மத்திய நிலையங்களினூடாக விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

நீண்ட காலத்துக் பின்னர் அரசாங்கத்தால் ரீ.எஸ்.பி உரம் வழங்கப்படுவதாகவும் விவசாயிகள் தத்தமது விவசாய அமைப்புகளினூடாக ரீ.எஸ்.பி.உரத்தைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.

இம்முறை சிறுபோகத்தில் அம்பாறை மாவட்டத்தில் 01 இலட்சத்து 35,000 ஏக்கரில் நெற்செய்கை பண்ணப்படவுள்ளது