புத்தி கெட்ட மனிதரெல்லாம்-அருமை சிறிதரன் எம்பி உருக்கம்

இதனை SHARE பண்ணுங்க

புத்தி கெட்ட மனிதரெல்லாம்” எனும் மிக அருமையான திரைக்கதை மூலம் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்திய எம் ஈழத்து இளம் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்


‘புத்தி கெட்ட மனிதரெல்லாம்” எனும் அற்புதமான முழு நீள திரைப்படத்தினை இயக்கிய poovan media குழும கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்


கதைக்களத்தை சிறப்பான முறையில் உருவாக்கிய இயக்குனர் சிவராஜ் அவர்களுக்கு அவர்தம் குழாத்தினருக்கு மிக இளம் வயதில் சாதிக்க முடியும் என்பதை சாதித்து காட்டிய சாதனையாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்


ஈழத்து திரைப்படங்கள் மேலும் வளர்ச்சி நிலையை அடையவேண்டும் இப்படியாக ஈழத்து கலைஞர்களின் படைப்புகள் மேலும் வரவேண்டும் இவர்களின் முயற்சி வெற்றியடைய என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.


தமிழர்களின் கலை வரலாற்றில் விடுதலைப்புலிகளின் காலம் பொற்காலம் போர் முடிந்ததன் பின்னரான காலப்பகுதியில் கலைஞர்கள் தங்களின் படைப்புக்களுக்கு உரித்தான அந்தஸ்து

கிடைப்பதில்லை என்பதான ஒரு குற்றச்சாட்டு கலைஞர்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது உண்மை தான்.


எம்மவர்கள் இந்த மண்ணில் இருந்தபோது கலைகளையும், கலைஞர்களையும் வளர்க்க விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக்கழகம் என்ற பிரிவு உருவாக்கப்பட்டு அதனூடாக பாரம்பரிய கலைகளையும், பண்பாட்டையும் வளர்த்திருந்தார்கள்.


கலைஞர்களும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆற்றிய பங்கு மகத்தானது. தங்களின் கலைப் படைப்புக்களால் போராட்டத்தின் பக்கம் மக்களை எழுச்சி கொள்ள வைத்தவர்கள் என்றால் மிகையில்லை.


ஈழத்து திரைப்படங்கள் விடுதலைப் புலிகளின் காலத்தில் உச்ச நிலை பெற்றிருந்தது எம்மவர்களின் கலை வெளிப்பாட்டின்பால் அந்நிலைக்கு ஈழத்து முழுநீள திரைப்படங்கள் வளர்ச்சி பெற வேண்டும் வாழ்த்துக்கள்


    இதனை SHARE பண்ணுங்க

    Author: நலன் விரும்பி

    Leave a Reply